தேசத்தை உலுக்கும் கொடிய வைரஸ்; உயிரை கொல்லும் தீவிரம் - கிளம்பிய புது ஆபத்து

Virus Africa
By Sumathi Apr 03, 2023 06:16 AM GMT
Report

 தீவிரம் உடைய, மார்பர்க் வைரஸ் ஆப்ரிக்காவில் வேகமாக பரவி வருகிறது.

மார்பர்க் வைரஸ் 

மேற்கு ஆப்ரிக்க நாடான கினியில், மார்பர்க் வைரஸ் பரவல் இருப்பது கடந்த பிப்ரவரி மாதம் கண்டறியப்பட்டது. ஆப்ரிக்காவில் உள்ள பழந்தின்னி வவ்வால்களிடம் இருந்து இந்த வைரஸ் பரவுகிறது. இந்த வைரஸ் வவ்வால்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவது இல்லை.

தேசத்தை உலுக்கும் கொடிய வைரஸ்; உயிரை கொல்லும் தீவிரம் - கிளம்பிய புது ஆபத்து | Marburg Virus That Spreads In Africa

கடுமையான காய்ச்சல், தலைவலி, உள் உறுப்புகள் மற்றும் உடலில் வெளிப்புறங்களில் ரத்தக் கசிவு போன்றவை மார்பர்க் வைரசின் அறிகுறிகள் என, மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த வைரஸ் 88 சதவீதம் உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது.

தீவிரம்

இதனால் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பவர்களுக்கு, உடலில் உள்ள வெட்டுக் காயம், வியர்வை உள்ளிட்டவை வாயிலாக தொற்று பரவுகிறது. இதுவரை ஒன்பது பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும்,

மேலும், 20 பேருக்கு அதற்கான அறிகுறிகள் தென்படுவதால் ஆப்ரிக்க நாடுகளுக்கு செல்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி, அமெரிக்காவின் சிடிசி எனப்படும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் எச்சரித்துள்ளது.