மராட்டிய முதல்வர் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி

covid wife Uddhav Thackeray marathi
By Jon Mar 26, 2021 02:00 PM GMT
Report

மராட்டிய முதல்வர் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன மராட்டியத்தில் கொரோனாவின் 2-வது அலை அசுர வேகம் எடுத்துள்ள நிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் மகனும், சுற்றுலாத்துறை மந்திரியுமான ஆதித்ய தாக்கரேக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் உத்தவ் தாக்கரேயின் மனைவி ராஷ்மி தாக்கரேக்கும் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் முதல்-மந்திரியின் வர்ஷா பங்களாவில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு உள்ளார். உத்தவ் தாக்கரேயும், அவரது மனைவி ராஷ்மி தாக்கரேயும் கடந்த 11-ந் தேதி மும்பை ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இந்தநிலையில் ராஷ்மி தாக்கரே தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளார். மராட்டியத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 28 ஆயிரத்து 699 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளானார்கள்