மரப்பாச்சி சொன்ன ரகசியம் : பால சாகித்ய அகாடமி விருது வென்றது

marappachiragaziyam sahityaakademiaward
By Irumporai Sep 04, 2021 06:19 AM GMT
Report

எழுத்தாளர் யெஸ்.பாலபாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 'மரப்பாச்சி சொன்ன ரகசியம்' என்ற நூலுக்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு மொழிகளில் வெளியாகும் கதை, கவிதை, கட்டுரை உள்ளிட்ட சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு, சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறார் இலக்கியப் படைப்புகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

அந்த வகையில் எழுத்தாளர் யெஸ்.பாலபாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. யெஸ்.பாலபாரதி எழுதிய ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்ற சிறார் நாவல் வெறும் தகவல் தொகுப்பாக இல்லாமல் குழந்தைகள் பாலியல் சித்திரவதை தொடர்பாகச் இந்தக் கதையில் ஆசிரியர் பேசியிருக்கிறார்.

குழந்தை பாலியல் சித்திரவதைதான் கதையின் மையம் என்றாலும், இன்றைக்கு நம் குழந்தைகளை ஆக்கிரமித்துள்ள வேறு பல முக்கிய பிரச்சினைகளையும் கதை தொட்டுச் செல்கிறது.

    இந்த நிலையில் பாலபாரதிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள தனது வாழ்த்துச் செய்தியில் : மரப்பாச்சி சொன்ன ரகசியம் என்ற புதினப் படைப்புக்காக, தமிழில் சிறந்த சிறுவர் இலக்கியத்திற்கான பால சாகித்ய புரஸ்கார் விருதைப் பெற்றிருக்கும் எழுத்தாளர் யெஸ்.பாலபாரதியை நெஞ்சார வாழ்த்துகிறேன்! மேலும் பல படைப்புகளைத் தமிழுக்கு வழங்கி புதிய உயரங்களைத் தொடட்டும் என தெரிவித்துள்ளார்.