விவாகரத்து முடிவுக்கு பின் வெளியான தனுஷின் முக்கிய அறிவிப்பு - ஷாக் ஆன ரசிகர்கள்

Maaran malavikamohanan gvprakashkumar தனுஷ் மாறன் ஜிவிபிரகாஷ்குமார் karthiknaren
3 மாதங்கள் முன்

தனுஷின் மாறன் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

தமிழ் சினிமாவின் பன்முக கலைஞர் என அழைக்கப்படும் நடிகர் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் என தனது நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்துள்ளார். அட்ராங்கி ரே படத்தை தொடர்ந்து அவர் மாறன், திருச்சிற்றம்பலம், வாத்தி உள்ளிட்ட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 

இதனிடையே கடந்த வாரம் தனுஷ் தனது காதல் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். 18 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததைக் கண்டு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரே அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணம் தனுஷ் தரப்பில் இருந்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அது கார்த்திக் நரேன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் “மாறன்” படம் பற்றியது தான். மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான “பொல்லாத உலகம்” குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது. 

You May Like This


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.