சத்தியபாமா, மரகதம் குமரவேல் தவெக எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்றனர்
maragatham kumaravel sathyabhama sworn as tvk mlas: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா தவெக எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்று கொண்டனர்.
சத்தியபாமா, மரகதம் குமரவேல் பதவியேற்றனர்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா இருவரும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளும்கட்சியான தவெகவில் இணைந்தனர்.
இதனையடுத்து கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில், தவெக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா வெற்றி பெற்றனர்.

மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் 20,040 வாக்குகள் வித்தியாசத்திலும், தாராபுரத்தில் சத்தியபாமா 9,471 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் வெற்றி பெற்ற இருவரும் இன்று தலைமை செயலகத்தில் தவெக எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இருவருக்கும் பதவி பிராமணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்வின் போது அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
உலக பெண் குழந்தைகள் தினத்தில், சுனிதா வில்லியம்ஸின் சாதனையும் சமர்அழகியின் உயிர்மாய்ப்பும்…. IBC Tamil
ஈரானில் கொடூரம்: சிறையிலிருந்த காதலியுடன் திருமணம் முடித்து அடுத்த நொடியே மணமகனுக்கு மரணதண்டனை IBC Tamil