பாஜகவில் இருந்து விலகும் அமர் பிரசாத் ரெட்டி; அண்ணாமலையின் இயக்கத்தில் இணைவதாக அறிவிப்பு!

Tamil nadu BJP K. Annamalai
By Vinoja Jun 10, 2026 10:50 AM GMT
Report

பாஜகவில் இருந்து விலகி, அண்ணாமலையின் அரசியல் இயக்கத்தில் இணையவுள்ளதாக அமர் பிரசாத் ரெட்டி அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, கடந்த ஜூன் 5ஆம் தேதி பாஜகவில் இருந்து விலகி புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கினார்.

பாஜகவில் இருந்து விலகும் அமர் பிரசாத் ரெட்டி; அண்ணாமலையின் இயக்கத்தில் இணைவதாக அறிவிப்பு! | Mar Prasad Reddy Joins Annamalai Movement

இதையடுத்து, அவரது இயக்கத்தில் பலர் இணைந்து வருகின்றனர். குறிப்பாக, தமிழ்நாடு பாஜகவில் இருந்து சில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விலகி அண்ணாமலையின் புதிய அரசியல் பயணத்தில் இணைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலையின் இயக்கத்தில் இணையவுள்ளதாக அமர் பிரசாத் ரெட்டி அறிவித்துள்ளார்.