ஓட கூட முடியாதவர்கள்..நேர்முகத் தேர்வில் இளைஞர்கள் செய்த காரியம் -அதிகாரிகளுக்கு நேர்ந்த அவலம்!
பாகிஸ்தான் காவலர் பணிக்கு ஓட கூட முடியாதவர்கள் நேர்முகத் தேர்வுக்கு வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாகிஸ்தான்
பாகிஸ்தானில் ரயில்வே காவல்துறை ஆட்சேர்ப்புகான நேர்முகத் தேர்வு கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இதில், விண்ணப்பதாரர்கள் சில முக்கியமான தரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். இதற்காக உடல் தகுதித் தேர்வு , எழுத்துத் தேர்வு மற்றும் தனிப்பட்ட நேர்காணல் ஆகியவை உள்ளன.
உடல் பரிசோதனையில் ஓட்டம் , உயரம் தாண்டுதல் மற்றும் பல சோதனைகள் அடங்கும். எழுத்துத் தேர்வில், பொது அறிவு , மனத்திறன் மற்றும் பகுத்தறியும் திறன் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் பின்னர் காவல்துறை பயிற்சி நிறுவனத்தில் சிறப்புப் பயிற்சி பெறுகிறார்கள்.அங்கு அவர்கள் சட்டம் , விசாரணை செயல்முறை மற்றும் கடமைகளில் பயிற்சி பெறுகிறார்கள்.அதன்படி, 250 ரயில்வே காவலர் பணிகளுக்கு ஆட்சேர்ப்பு தேவை என அறிவிக்கப்பட்டது.
நேர்முகத் தேர்வு
இதற்காக 14 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.இதில் தகுதி அடிப்படையில் 4000 பேர் தேர்வு செய்யப்பட்டு ஆண்கள் பெண்களை நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இதில் 1200 பேர்மட்டும் அடுத்தகட்ட தேர்வுக்கு முன்னேறினர்.
அப்போது உடற்தகுதி தேர்வில் ஒரு கிலோ மீட்டர் தூரம் கூட பலரால் ஓட முடியவில்லை. சிலர் மயக்கி விழுந்தனர்.இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனை இளைஞர்கள் கேலியும், கிண்டலும் செய்து வருகின்றனர்.