‘’இங்க நிறைய பேர் என் எச்சியில் இருந்துதான் கட்சி நடத்துகிறார்கள் ‘’ - கொதித்தெழுந்த சீமான்

seeman angry
By Irumporai Oct 20, 2021 07:08 AM GMT
Report

கிறிஸ்துவர்களையும் இஸ்லாமியர்களையும் தாய்மதம் திரும்ப சொல்கிறார் சீமான் என்ற சர்ச்சை வெடித்திருக்கும் நிலையில், தான் அப்படி சொல்லவே இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார் சீமான்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, நாங்கள் இந்துக்கள் அல்ல. கிஸ்துவம் ஐரோப்பிய மதம்.இஸ்லாம் அரேபிய மதம். மரச்செக்குக்கு திரும்பியதை போல, கருப்பட்டிக்கு திரும்பியதை போல எல்லோரும் திரும்புங்க என்று பேசியிருந்தார்.

சீமானின் இந்த கருத்து  பெரும் சர்ச்சையானது,சீமானின் இந்த பேச்சு இந்துத்துவ வாதிகளின் குரலாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி வன்னியரசு, சீமானை பாஜக பி டீம் என்று சொன்னதோடு அல்லாமல், அவரை பாஜக பிரமுகர் போல் சித்தரித்து கடுமையாக விமர்சித்து வந்தார்.

திரைப்பட இயக்குனர் அமீர், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் தாய்மதம் திரும்ப வேண்டும் என்று சொன்ன சீமானுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். சீமானின் இந்த பேச்சை பாஜகவினர் கைதட்டி வரவேற்கிறார்கள். அப்படி என்றால் பாஜகவினர் கைதட்டும் அளவிற்கு ஏன் சீமான் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

ஒருவேளை நான் தாய் மதம் திரும்பினால், என்னை எந்த சாதியில் சேர்த்துக் கொள்வீர்கள் என்ற கேள்வியையும் எழுப்பினார்.

இந்த நிலையில் பெரம்பலூரில் மறைந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி அருளின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று சீமான் பேசியபோது இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார்.

அப்போது பேசிய சீமான் :

‘’நான் படுகின்ற பாடு இருக்கே.. நம்ம ஒண்ணு பேசுனா அவுங்க ஒண்ணு எடுத்து பேசுறாங்க. கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் எல்லாம் மதம்மாறன் சொல்கிறார் சீமான் என்று பேசுகிறார்கள்.

எப்படித்தான் இவங்க எல்லாம் மனசாட்சியே இல்லாம பேசுறாங்கன்னு தெரியல. நான் என்னமோ தாய்மதம் திரும்ப வேண்டும் என்று இஸ்லாமியர்களையும், கிறிஸ்துவர்களையும் அழைத்தேனா? நான் என்ன மதம் பரப்ப வந்த கால்டுவெல்.. ஜி.யு. போப்பா நான்? நான் இனம் மதம் பரப்ப வந்த ஆள் அல்ல.

நான் என் மொழி, இனம் என் வரலாறு என் கோட்பாடு அதுல உறுதியா இருப்பேன். தமிழர்கள்தான் இந்துக்கள் என்று எச்.ராஜா பேசினார். அதை இங்கு யாருமே எதிர்க்கவில்லை.

இந்துக்கள் எல்லாம் தமிழன் என்றால், பீகாரில் உள்ளவன், குஜராத்தில் உள்ளவன் எல்லாம் தமிழன் ஆகிவிடுவானா? எச்.ராஜா தமிழன் ஆகிவிடுவாரா? அதை ஒருத்தணும் எதிர்த்து பேசல.

தாய்மதம் திரும்ப சொல்லிட்டேனாம். அப்படி நான் சொல்லவே இல்லையே. நான் ஒண்ணு பேச இவங்க ஒண்ணு பேசிக்கிறாங்க.

பலபேர் என் எச்சியில் இருந்துதான் கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு   ஒருவேளை கிடையாது என கூறிய சீமான்.

 சும்மா ஆர்.எஸ்.எஸ்., பிஜேபின்னு சொல்றது. இதுக்கெல்லாம் பயந்துகிட்டு விட்டுட்டு போற ஆளு கிடையாது நான். எவ்வளவோ பார்த்துட்டோம் இத பார்க்க மாட்டோமா? இன்னும் பார்ப்போம். 24ல் ஒரு தேர்தல் இருக்கு. 26ல் ஒரு தேர்தல் இருக்கு. அதையும் பார்க்கத்தான் பொறோம் என கூறினார்.