தப்பு நடக்காதா என பலர் காத்திருக்கின்றனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தும்மினால் கூட விமர்சனம் செய்ய பலர் காத்திருக்கின்றனர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தும்மினால் கூட விமர்சனம்
பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
பின்னர் மேடையில் பேசிய அவர், அமைச்சர் சா.மு. நாசர் எதை செய்தாலும் பிரம்மாண்டமாக தான் செய்வார். அதனால் தான் அவரே கூறினார் திருமணத்திற்கு தேதி கொடுத்தேன்.
தேதி கொடுத்துவிட்டு எனக்கு பயம் வந்துவிட்டது. ஏனென்றால் இவர் அமைச்சர் என்பதால் ஆடம்பரமாக பிரம்மாண்டமாக செய்துவிடுவாரே? அதனால் ஏதேனும் விமர்சனம் வந்துவிடுமே...நாசராக இருந்து விமர்சனம் வந்தால் பிரச்சனை இல்லை.
அமைச்சர் பொறுப்பில் உள்ள நாசருக்கு ஏதோ ஒரு இழுக்கு வந்துவிட்டால் அது எனக்கு மட்டுமல்ல அது கட்சிகக்கு அவப்பெயர் வந்துவிடுமே? எங்கே என்ன தவறு நடக்கும் என்று பலர் காத்திருக்கின்றனர்.
தும்மினால் போதும் அதை கண்டுபிடித்து அதை செல்போனில் புகைப்படம் எடுத்து அதை வெளியிடக்கூடிய ஊடகங்கள் எல்லாம் இன்று உள்ளது என்று தெரிவித்தார்.
அந்த அளவிற்கு சமூகவலைத்தளம் பரவி வருகிறது. அதனால் திருமணம் மிகவும் சாதாரணமாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் நாசரை அழைத்துக் கூறியதாக தெரிவித்தார்.