"நீட் தேர்வு வேண்டாம்" என பெரும்பாலானோர் கருத்து: ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தகவல்

Tn government No neet
By Petchi Avudaiappan Jun 21, 2021 02:36 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

நீட் தேர்வு வேண்டாம் என்றே பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்திருப்பதாக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வில் தாக்கத்தினை ஆய்வு செய்து அறிக்கை வழங்கிட தமிழக அரசு உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 8 பேர் அடங்கிய உயர்மட்டக் குழுவை நியமித்துள்ளது.

இக்குழுவின் இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்கக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் இதுவரை பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகள் மூலம் கிடைத்திருக்கும் தகவல்களை ஆய்வு ஆய்வு செய்வது அது குறித்து ஆலோசித்து அறிக்கையை விரைந்து தயாரிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த உயர்மட்டக் குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ கே ராஜன், இதுவரை 25 ஆயிரம் தரவுகள் பொதுமக்களிடமிருந்து மின்னஞ்சல் மூலமாகவும், கடிதம் வாயிலாகவும் ஆணையத்திற்கு கிடைத்திருப்பதாக கூறினார்.

இந்த தகவல்களை வைத்து அறிக்கையை தயாரிக்க ஆணையம் ஆலோசித்து வருகிறது என்றும், இதுவரை கிடைக்கப் பெற்றுள்ள தரவுகளில் பெரும்பாலானவை நீட் தேர்வு வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஆணையம் அமைத்து அரசாணை வெளியிட்ட நாள் முதல் ஆணையத்தின் உறுப்பினர்கள் நீட் தேர்வின் தாக்கத்தினை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க தொடர்ந்து பணிபுரிந்து வருகிறோம்.

மக்களின் கருத்தை வைத்து தான் அறிக்கை தயாரிக்க உள்ளதால் எங்களது அறிக்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.