? Live: மாண்டஸ் புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படும் - மின்வாரியம் அறிவிப்பு

Power Cut Today
By Nandhini Dec 09, 2022 11:38 AM GMT
Report

மாண்டஸ் புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

மாண்டஸ் புயல்

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் வழுவிழந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. நாகப்பட்டினம் அருகே இருக்கும் இந்த மாண்டஸ் புயல் காரணமாக வடக்கு மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், சென்னையிலும் கனமழை மற்றும் தீவிர காற்று வீசிக்கொண்டிருக்கிறது.

மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் இருந்து 180 கிமீ துாரத்தில் மையம் கொண்டிருக்கிறது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்க உள்ளது.

இதனால் நாளை சென்னை, காஞ்சிபுரம், வேலுார், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

mantus-storm-tamilnadu-power-board-rain

மின்சாரம் நிறுத்தப்படும்

இந்நிலையில், மாண்டஸ் புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மேலும், புயல் கரையை கடக்கும்போது ஏற்படும் மின்சாரம் தொடர்பான பாதிப்புகளை சரிசெய்ய ஊழியர்கள் தயார் நிலையில் இருக்க மின்சார வாரியம் உத்தரவிடப்பட்டுள்ளது.