?LIVE: மாண்டஸ் புயல் எதிரொலி - விமான சேவைகள் ரத்து
மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரியில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விமான சேவைகள் ரத்து
நாளை காலை மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புதுச்சேரியில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து பெங்களூர், செல்லும் விமான சேவையும்,

புதுச்சேரியில் இருந்து ஐதராபாத்திற்கும் செல்லும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கும்,பெங்களூரிலிருந்து புதுச்சேரிக்கும் விமான சேவையானது ரத்து செய்யப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக விமான சேவையை ரத்து செய்தது ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.