? Live: மாண்டஸ் புயல் எதிரொலி - ஆந்திராவில் வெளுத்து வாங்கும் கனமழை..!
மாண்டஸ் புயல் எதிரொலியாக ஆந்திரா மாநிலம், திருப்பதியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
மாண்டஸ் புயல்
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் வழுவிழந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது.
நாகப்பட்டினம் அருகே இருக்கும் இந்த மாண்டஸ் புயல் காரணமாக வடக்கு மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், சென்னையிலும் கனமழை மற்றும் தீவிர காற்று வீசிக்கொண்டிருக்கிறது.
மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் இருந்து 180 கிமீ துாரத்தில் மையம் கொண்டிருக்கிறது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்க உள்ளது.
இதனால் நாளை சென்னை, காஞ்சிபுரம், வேலுார், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் கனமழை
மாண்டஸ் புயல் எதிரொலியாக ஆந்திரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. திருப்பதியில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் திருப்பதி கோவில் உள்ள பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Andhra Pradesh | Heavy rain in Tirumala, Tirupati under the influence of cyclone #Mandous pic.twitter.com/zJwth9V72c
— ANI (@ANI) December 9, 2022
Non stop Rain from Morning #Tirupati pic.twitter.com/S63k6M3E5e
— రాగి సంగటి (@KarthikYaksha1) December 9, 2022