விஜய் கட்சி தொடங்குனா.. நான் ஓடிப்போய் பதுங்கிக்கணுமா..? - மன்சூர் அலிகான் அதிரடி!
நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
மன்சூர் அலிகான்
நடிகர் மன்சூர் அலிகான் கடந்த 2021-ல் நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறி 'தமிழ் தேசிய புலிகள்' என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.
இதையடுத்து அந்த கட்சியின் சார்பில் 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில் தமிழ் தேசிய புலிகள் என்ற தன்னுடைய அமைப்பை 'இந்திய ஜனநாயகப் புலிகள்' என பெயர் மாற்றம் செய்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக மன்சூர் அலிகான் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
நான் பதுங்கிக்கணுமா?
அப்போது அவரிடம் "இன்னும் ஒரு மாதத்திற்குள் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக தகவல் வந்துள்ளது" என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த மன்சூர் அலிகான் "அதற்காக நான் என்ன ஓடிப்போய் பதுங்கிக்கணுமா? என்றார். அப்போது "நீங்கள் அவருக்கு ஆதரவளிப்பீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர் "அது நாளை.. இப்போது விஜய் G.O.A.T படத்தில் பிசியாக நடித்து வருகிறார். நாளைக்கு அவர் கட்சி தொடங்குகிறார் இவர் தொடங்குகிறார்.. அதைப்பற்றியெல்லாம் எங்களுக்கு பயம் இல்லை" என்று மன்சூர் அலிகான் பதிலளித்துள்ளார்.