இயந்திர வாக்குப்பதிவு மூலம் மாப்பிள்ளையாக பார்க்கிறார் பிரதமர் மோடி - மன்சூர் அலிகான்!

Tamil nadu Narendra Modi Mansoor Ali Khan
By Jiyath Feb 26, 2024 10:37 AM GMT
Report

பிரதமர் மோடி 3-வது முறையும் மின்னணு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடத்தி மாப்பிள்ளை ஆக பார்ப்பதாக மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

இந்திய ஜனநாயக புலிகள் 

நடிகர் மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் முதல் மாநாடு பல்லாவரத்தில் நடந்தது. இந்த மாநாட்டில் வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடத்துவது, மது, கஞ்சா, போதைப் பொருள் ஒழிப்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இயந்திர வாக்குப்பதிவு மூலம் மாப்பிள்ளையாக பார்க்கிறார் பிரதமர் மோடி - மன்சூர் அலிகான்! | Mansoor Ali Khan Talks About Pm Modi

இந்நிலையில் மன்சூர் அலிகான் அளித்த பேட்டியில் "வருகிற பாராளுமன்ற தேர்தலில் எங்களது இந்திய ஜனநாயக புலிகள் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி சில கட்சிகளுடன் பேசி வருகிறோம்.

இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி; பொறுத்திருந்து பாருங்கள் - ஓ.பன்னீர்செல்வம்!

இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி; பொறுத்திருந்து பாருங்கள் - ஓ.பன்னீர்செல்வம்!

மோசடி நடைபெறுகிறது

மின்னணு இயந்திர வாக்குப்பதிவு மூலம் 2 முறை மாப்பிள்ளை ஆகிவிட்டார் பிரதமர் மோடி. 3-வது முறையும் மின்னணு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடத்தி மாப்பிள்ளை ஆக பார்க்கிறார். 

இயந்திர வாக்குப்பதிவு மூலம் மாப்பிள்ளையாக பார்க்கிறார் பிரதமர் மோடி - மன்சூர் அலிகான்! | Mansoor Ali Khan Talks About Pm Modi

எந்திர வாக்குப்பதிவில் மோசடி நடைபெறுகிறது. மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டு தேர்தல் நடத்த வேண்டும். இந்தியாவிலும், நைஜீரியாவிலும் தான் எந்திர வாக்குப்பதிவு உள்ளது. வேறு எந்த நாட்டிலும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.