“மன்சூர் அலிகான் சொல்வதை என்னால் ஏற்க முடியாது" - மனம் திறந்து பேசிய சீமான்!

election seeman tamilnadu ntk mansoor
By Jon Mar 10, 2021 02:28 PM GMT
Report

"மன்சூர் அலிகான் தனக்கு தொகுதி கொடுக்கவில்லை என்று சொல்வதை ஏற்கவே முடியாது" என்று 'நாம் தமிழர்' கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மன்சூர் அலிகான் விலகல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சீமான் பேசுகையில், “ராஜீவ் காந்தியையும் கலியாண சுந்திரத்தையும் நாம் விலக்கினோம்.

ஆனால் மன்சூல் அலிகான் அண்ணன் அவராகவே விலகி சென்றுவிட்டார். 'அவர் தொகுதி ஒதுக்கவில்லை. அதனால் விலகினேன்' என சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் தொகுதி கொடுத்தேன். ஏன் பொய் சொல்லணும்? பட்டுக்கோட்டை தொகுதியை கேட்டார். ஆனால், அங்கு ஏற்கெனவே தங்கச்சியை நிற்க சொல்லி வேலை செய்ய சொல்லிவிட்டேன். அவரைத் திரும்ப பெறுவது என்பது சாத்தியம் கிடையாது.

  “மன்சூர் அலிகான் சொல்வதை என்னால் ஏற்க முடியாது" - மனம் திறந்து பேசிய சீமான்! | Mansoor Ali Khan Seeman Election

அதனால் சேப்பாக்கம் தொகுதியில் நிற்குமாறு கூறினேன். அந்த தொகுதியையும் கொடுத்துவிட்டேன். அங்கு என் ஊரைச் சேர்ந்த இஸ்லாமிய மக்கள் அதிகமாக இருக்கிறார்கள். அனைவரும் எனது சொந்தக்காரர்கள்தான்.

மன்சூர் அலிகானும் எனது ஊரில்தான் பெண் எடுத்துள்ளார். அதனால் அங்கு நிற்க சொன்னேன். ஒரு நாள் களத்திற்கு சென்று வேலை பார்த்தார். பின்னர்தான் திடீரென்று புதுக்கட்சி தொடங்குகிறேன் என சொல்லிவிட்டார். அதுதான் வருத்தம்” என்றார்.