மைதானத்தில் இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடிய மன்சூர் அலிகான்
கோவை மாவட்டம் கோவைபுதூர் பகுதியில் உள்ள மைதானத்தில் இளைஞர்களுடன் நடிகரும், தொண்டாமுத்தூர் தொகுதி சுயேச்சை வேட்பாளருமான மன்சூர் அலிகான் கிரிக்கெட் விளையாடினார். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வருகின்ற வேட்பாளர் நடிகர், மன்சூர் அலிகான், தென்னை மரச் சின்னத்தில் போட்டியிட்டு வருகிறார்.
மேலும் தனது தொகுதிக்குட்பட்ட அனைத்து, வீடுகளுக்கும் சென்று பொதுமக்களிடத்தில் நற்பெயரை எடுக்கும் விதமாக வாக்குகளை சேகரித்து வருகின்றார்.
பொது மக்களின் வீடுகளுக்குள் ஒரு வேட்பாளராக செல்லாமல், அவர்களின் நண்பனை போல, சாதாரணமாக பொதுமக்களின் கைகளை பிடித்தும், அவர்களின் தோள்களில் கையை போட்டு பேசியபடி அவர்களது வீடுகளுக்கு சென்று தண்ணீரை வாங்கி அருந்துகின்றார், தேநீர் வாங்கி அருந்துகின்றார், இப்படி பொதுமக்களிடத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு, வருகின்றார்.

இது தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ள பொது மக்களிடத்தில் மன்சூர் அலிகானுக்கு ஒரு நல்ல ஒரு மதிப்பையும், நற்பெயரையும், ஏற்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் இன்று கோவை புதூர் பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு சென்ற மன்சூர் அலிகான், அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்த இளைஞர்களுடன், தானும் சேர்ந்து கொண்டு, கிரிக்கெட் விளையாடி அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.
கிரிக்கெட் விளையாடுவதற்கு வந்த வேட்பாளர் மன்சூர் அலிகானை சூழ்ந்து கொண்ட குழந்தைகள், அவரிடம் செல்பி எடுத்தபடியும், அவரின் கையொப்பத்தை பேப்பர்களில் வாங்கியும் மகிழ்ந்தனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகின்ற மன்சூரலிகான் ஒரு வேட்பாளராக இல்லாமல் மக்களோடு மக்களாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.