சீமானை விட்டு விலகிய மன்சூர் அலிகான்: காரணம் என்ன?

actor politics ntk mansoor
By Jon Mar 02, 2021 12:38 PM GMT
Report

நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்து வந்த நடிகர் மன்சூர் அலிகான், அக்கட்சியில் இருந்து விலகி, ’ தமிழ் தேதிய புலிகள் என்ற புதிய கட்சியை தொடங்கினார். நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள் மற்ற கட்சிக்கு மாறி வருகின்றனர். ராஜீவ்காந்த் சீமானிடம் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். அதே போல் கல்யாணசுந்தரம் அதிமுகவில் இணைந்தார். மேலும் பல்வேறு உறுப்பினர்கள் நாம் தமிழர் கட்சியினை விட்டு விலகி மற்ற கட்சிகளில் இணைந்தனர். குறிப்பாக நேற்று சீமான் சசிகலாவினை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது. மூன்றாவது அணியில் உருவாகின்றதா? அதில் சீமானும் உள்ளாரா? என கேள்வி எழுந்தது.

  சீமானை விட்டு விலகிய மன்சூர் அலிகான்: காரணம் என்ன? | Mansoor Ali Khan Leaves Seeman Reason

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியில் காரசாரமான பேச்சுக்களை பேசும் மன்சூர் அலிகானும் விலகி புதிய கட்சியை தொடங்கி இருப்பது நாம் தமிழர்கள் க்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிசார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார் மன்சூர் அலிகான்.

ஆனாலும், அவரின் வித்தியாசமான பிரச்சாரங்கள் ஊடகங்களிலும் சமூக வலைத்தங்களிலும் முக்கிய இடம்பிடித்தன. சீமானை முதல்வர் ஆக்க வேண்டும் என்று தீவிர பிரச்சாரம் செய்து வந்த அவர், சீமான் மீதான அதிருப்தியில் அவரிடம் இருந்து விலகி, புதிய கட்சியை தொடங்கி உள்ளார் மன்சூர் அலிகான்.

சட்டமன்ற தேர்தலில் சீமான் எனக்கு தொகுதி ஒதுக்கவில்லை. அதனால் நான் வெளியேறினேன் என்று தெரிவித்துள்ளார் மன்சூர் அலிகான். மேலும், தனது புதிய கட்சி, நாம் தமிழர் கட்சிக்கு எந்த விதத்திலும் போட்டியான கட்சி அல்ல என்றும் தெரிவித்திருக்கிறார்.