மன்சூர் அலிகான் சாகும்வரை உண்ணாவிரதம் - என்ன காரணம்?
காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மன்சூர் அலிகான் தொடங்கியுள்ளார்.
உண்ணாவிரதப் போராட்டம்
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, பொதுத் தேர்தல்களுக்கான சிறப்பு தீவிரத் திருத்தம் – 2026 பணிகள் தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சில இடங்களில் முகாம்கள் அமைத்தும், வாக்குசாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்றும் வாக்காளர்களுக்கு கணக்கீட்டுப் படிவங்களை வழங்கி நிரப்பப்பட்ட படிவங்களை மீண்டும் பெற்று வருகின்றனர்.
மன்சூர் அறிவிப்பு
இந்நிலையில் பிற மாநிலத்தவருக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை தரக்கூடாது என வலியுறுத்தி இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

அதன்படி, சென்னை எழும்பூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய அவர், சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளார்.