தடுப்பூசி திட்டத்துக்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும், வதந்தி பரப்பக்கூடாது - மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை முன்ஜாமீன்
கொரோனா தடுப்பூசி தொடர்பாக வதந்தி பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
நடிகர் விவேக் மரணத்தைத் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் தான் அவர் மறைந்தார் என மன்சூர் அலிகான் பேசியிருந்தார்.
இந்தப் பேச்சு இணையத்தில் வைரலானது. தற்போது தொடர்பாக வதந்தி பரப்பினார் என அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.
அந்த வழக்கில் முன் ஜாமின் கோரி மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் இன்று நிபந்தனை முன் ஜாமின் வழங்கியுள்ளது உயர்நீதிமன்றம்.
கொரோனா தடுப்பூசி வாங்குவதற்காக ₹ 2 லட்சத்தை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பெயரில் டி.டி.யாக செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமின் வழங்கப்பட்டது.
தடுப்பூசி குறித்து புரளி பரப்பக் கூடாது, பதற்ற நிலையை உருவாக்கக் கூடாது, அறிவியல் தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் நடிகர் மன்சூர் அலிகானுக்கு நீதிபதி தண்டபாணி அறிவுரை