மக்களோடு மக்களாக நடனமாடி வாக்கு சேகரித்த மன்சூர் அலிகான்
கோவை பேரூரில் வாக்கு சேகரிக்கச் சென்ற நடிகர் மன்சூர் அலிகான் அங்கு திருமண மண்டபத்தில் இருந்த புது மணத்தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து, அங்கிருந்த மக்களிடமும் வாக்கு சேகரித்தார். கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான், தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் நேரடியாக சென்று மக்களை சந்தித்து நூதன முறையில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை கோவை பேரூர் பகுதிக்கு வந்த மன்சூர் அலிகான் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது சாலையில் வந்த ஒருவரிடமிருத்து குழந்தையை தூக்கி கொஞ்சினார். பின்னர் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்திற்கு சென்ற அவர் அங்கிருந்த சம்பதிகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது அங்கிருந்த மணமக்களின் உறவினர்கள் மன் சூர் அலிகானுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். மேலும் அங்கு பொதுமக்களுடன் நடனமாடி வாக்கு சேகரித்தார்.