இரட்டை இலை இல்லைனா.. வாழை இலை - மன்சூர் அலிகான் பேச்சு!
அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியது குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியுள்ளார்.
மன்சூர் அலிகான்
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடப் போவதாக இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார். இதற்காக நேற்று வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள வஉசி நகரில் தனக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகானிடம், அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் "அவர்களிடம் போய் பேசி விட்டு வந்தேன்.
உடம்புக்கு நல்லது
அது குறித்து இன்னும் ஏதும் தகவல் இல்லை. நான் இங்கே வேலூரில் நிற்கிறேன். அவர்கள் சரி என்றால் இரட்டை இலை, இல்லை என்றால் வாழை இலை. வாழை இலை போட்டு உட்கார்ந்து சாப்பிட வேண்டியதுதான்.

வாழை இலை உடம்புக்கு நல்லது, இரட்டை இலையும் உடம்புக்கு நல்லது. ஆனால் கறிவேப்பிலையாக மாறிவிடக்கூடாது " என்றார். மேலும் பேசிய அவர் "நான் நின்றால் மாநாடு, நடந்தால் ஊர்வலம், படுத்தால் பந்த். எப்போது வேலூரில் இறங்கினேனோ அப்போதே பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் போன்றதொரு நிலையை இலங்கையில் ஏற்படுத்த திட்டம் : அரசு மீது சாகர காரியவசம் பாய்ச்சல் IBC Tamil