ரூ.4,000 கோடி மாளிகை.. 700 சொகுசு கார்கள்.. உலகின் பணக்கார குடும்பம் இல்லை - ஏன் தெரியுமா?
ரூ.4,000 கோடி மதிப்புள்ள மாளிகை வைத்திருக்கும் அரச குடும்பம் பணக்கார குடும்ப பட்டியலில் இடம்பெறாதது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அரச குடும்பம்
2025ம் ஆண்டிற்கான ஆசியாவின் பணக்கார குடும்பங்கள் யார் என்று ப்ளூம்பெர்க் ஆய்வு நடத்தியது. அதன்பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், ஆசியாவின் பணக்கார குடும்பங்களான முகேஷ் அம்பானி, கௌதம் அதானி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
ஆனால் இவர்களை விட அதிக செல்வத்தை உடைய ஒரு குடும்பம் ஒன்று உள்ளது.அது பணக்கார குடும்ப பட்டியலில் இடம்பெறாதது குறித்து விரிவாகப் பார்க்கலாம். ஐக்கிய அரபு எமிரேட்ஸை (UAE)ஆளும் அல் நஹ்யான் அரச குடும்பம் தான்.
உலகின் 2வது பணக்கார குடும்பமாகும். அபுதாபியில் உள்ள காசர் அல் வதன் அரண்மனை என்று அழைக்கப்படும் ஆடம்பர சொகுசு மாளிகையில் அல் நஹ்யான் குடும்பம் வசித்து வருகிறது.
சொத்து மதிப்பு
இந்த சொகுசு மாளிகையின் மதிப்பு ரூ.4,000.மேலும் மாளிகையில் 1,000 அறைகள், திரையரங்கம், பந்துவீச்சு சந்து, நீச்சல் குளங்கள் ,மசூதி உள்ளனர். அதுமட்டுமின்றி தங்க முலாம் பூசப்பட்ட லம்போர்கினி அவென்டடோர் SV கார் உட்பட 700-க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் இவர்களிடம் உள்ளது.
இவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 300 பில்லியன் டாலர்களுக்கு மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் எவ்வளவு சொத்துக்கள் இருந்தும் இவர்கள் உலகின் பணக்கார குடும்பம் இல்லை. அந்த இடத்தை வால்டன் குடும்பம் பிடித்துள்ளது இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 432 பில்லியன் டாலர் ஆகும்.