“அம்மான்னா சும்மா இல்லடா” - ஒலிம்பிக் பதக்கத்தை தாய்க்கு அணிவித்த இந்திய வீரர்

tokyoolympics2020 manpreetsingh indianhockeyteam
By Petchi Avudaiappan Aug 12, 2021 12:30 PM GMT
Report

 இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் ஒலிம்பிக் பதக்கத்தை தனது தாய்க்கு அணிவித்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் ஜெர்மனியை 5-4 என்று வீழ்த்திய இந்திய அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் பதக்கம் வென்று வரலாறு படைத்தது.

இந்த வரலாற்று வெண்கலப்பதக்கத்தை கொரோனா போராளிகள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு அர்ப்பணிப்பதாக இந்திய ஹாக்கி கேப்டன் மன்பிரீத் சிங் அறிவித்தார். மேலும் நாடு திரும்பிய ஹாக்கி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் வெண்கலப் பதக்கத்தை இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் தனது தாய்க்கு அணிவித்து அவர் மடியில் தூங்குவது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் அந்த பதிவில், "அவளுடைய புன்னகையைப் பார்த்ததும், அவள் என்னைப் பற்றி எவ்வளவு பெருமைப்படுகிறாள் என்பதை அறிவதும் என் முகத்தில் புன்னகையைத் தருகிறது- அவள் இல்லாமல் இங்கு இருக்க முடியாது" என பதிவிட்டுள்ளார்.