தோனியிடம் அதை சொல்ல பயிற்சியாளருக்கு தைரியம் இல்லை - முன்னாள் வீரர் காட்டம்
தோனி 9வது இடத்தில் களமிறங்கியது குறித்து முன்னாள் வீரர்கள் விமர்சித்துள்ளனர்.
CSK தோல்வி
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில், பெங்களூரு அணி வென்றது.
சேப்பாக்கம் மைதானத்தில், 17 வருடங்களுக்கு பிறகு பெங்களூரு அணியிடம் சென்னை தோல்வியை தழுவியதால், CSK ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
ஒரு பக்கம் சென்னை அணி பீல்டிங்கில் சொதப்பியதும், பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்ததும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
தோனி களமிறங்கும் போது, வெற்றி பெற 28 பந்துகளில் 98 ரன்கள் தேவைப்பட்டது. 16 பந்துகளில் 30 ரன்கள் தோனி எடுத்தாலும், அணி தோல்வியை சந்தித்தது.
பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து அணி தோல்வியை சந்திக்க உள்ள சூழலில், தோனி 9ஆவதாக களமிறங்கியது ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வந்தது.
தோனி மீது விமர்சனம்
இந்நிலையில், இது குறித்து பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி, "16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த பிறகும் ஆட்டமிழக்காமல் இருக்கக்கூடிய தோனி போன்ற பேட்ஸ்மேன், ஏன் முன் வரிசையில் களமிறங்க கூடாது?
தோனியை முன்வரிசையில் களமிறங்க சொல்ல, சென்னை அணியின் பயிற்சியாளர்களுக்கு தைரியம் இல்லை. அவர் என்ன முடிவெடுக்கிறாரோ, அதை அப்படியே செயல்படுத்துகிறார்கள்" என குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதே போல் CSK அணிக்காக இதற்கு முன்னர் ஆடிய ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சனும், ரசிகர்கள் தோனி விளையாடியதை ரசித்தார்கள். ஆனால் தோனி முன்னதாக களமிறங்கி இருந்தால் வெற்றிக்கான வாய்ப்பை அதிகப்படுத்தி இருக்கலாம் என கூறியுள்ளார்.
I will never be in favour of Dhoni batting at number 9. Not ideal for team.
— Irfan Pathan (@IrfanPathan) March 28, 2025
அதே போல், முன்னாள் வீரர்கள் ராபின் உத்தப்பா, இர்பான் பதான், ஷேவாக் ஆகியோர் தோனி 9வதாக இறங்கியது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.