ரஜினிக்கு டூப் போட்ட மனோஜ் .. வைரலாகும் புகைப்படம்.. எந்தப் படத்தில் தெரியுமா?

Manoj Bharathiraja Tamil Cinema Bharathiraja Death
By Vidhya Senthil Mar 26, 2025 10:33 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in சினிமா
Report

ரஜினிக்கு டூப் மனோஜ் பாரதிராஜாவின் புகைப்படம் இனையத்தில் வைரலாகி வருகிறது.

 மனோஜ் பாரதிராஜா

தமிழ் சினிமாவின் இயக்குநர் சிகரம் என்று அழைக்கப்படும் பாரதிராஜாவின் ஒரே மகன் மனோஜ் பாரதிராஜா. 1999 ஆம் ஆண்டு பாதிராஜா இயக்கத்தில் வெளியான தாஜ்மஹால் படத்தின் மூலம் அறிமுகமானார்.இதனை தொடர்ந்து தாஜ்மஹால், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம்,மாநாடு ,விருமன் ,படங்களில் நடித்துள்ளார்.

ரஜினிக்கு டூப் போட்ட மனோஜ் .. வைரலாகும் புகைப்படம்.. எந்தப் படத்தில் தெரியுமா? | Manoj Bharathiraja Acted Rajini Movie

48 வயதான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் இன்று காலமானார். இயக்குநர் பாரதிராஜாவின் மகனான இவருக்கு ஒரு மாதத்திற்கு முன்பு மனோஜுக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து வீட்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

ரஜினிக்கு டூப் 

அவரது மறைவு திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவர் ‘பம்பாய்’ படத்தில் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின்னர் இயக்குனர் ஷங்கரிடம் ‘எந்திரன்’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார்.

ரஜினிக்கு டூப் போட்ட மனோஜ் .. வைரலாகும் புகைப்படம்.. எந்தப் படத்தில் தெரியுமா? | Manoj Bharathiraja Acted Rajini Movie

அந்த சமயத்தில் ‘எந்திரன்’படத்தில் ரஜினிக்கு டூப் போட்டுள்ளார் மனோஜ். அப்படத்தில் ரஜினி சிட்டி ரோபோவாக ஐஸ்வர்யா ராயுடன் காரில் பயணிக்கும் காட்சியில் ரஜினிக்கு டூப் போட்டு நடித்தவர் மனோஜ் பாரதிராஜா தான். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகின்றன.