பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல ஓவியர் மனோகர் தேவதாஸ் உயிரிழந்தார்...!
புகழ்பெற்ற ஓவியரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான மனோகர் தேவதாஸ் (83) உடல்நலக் குறைவால் இன்று உயிரிழந்தார்.
ஓவியர் மனோகர் தேவதாஸ்
மதுரையில் பிறந்த மனோகர் ஓவியர் மட்டுமல்ல சிறந்த எழுத்தாளரும் கூட. இவர் வரைந்த பாரம்பரியமிக்க, கலைநயமிக்க புராதான மதுரை கோவில், சென்னை பகுதியில் உள்ள புராதான கட்டங்களை கருப்பு வெள்ளை கோட்டுச் சித்திரங்களாக வரைந்து ஆவணப்படுத்தியிருக்கிறார்.
சிறுவயதில் ரெட்டினா பிக்மன்டோசா என்ற பிரச்சனையால் இவருக்கு கண் பார்வைத் திறன் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தது. கடந்த ஓராண்டிற்கு முன் முழுமையாகப் பார்வையை இவர் இழந்தார்.
பார்வையை முழுமையாக இழந்த நிலையிலும் சென்னையின் பாரம்பரிய கட்டடங்களின் ஓவியங்கள் அடங்கிய புத்தகத்தை உருவாக்கினார். கண் பார்வை மங்கிய நிலையிலும், பென்சில் ஸ்கெட்ச்கூட போடாமல் அப்படியே பேனாவால் வரையும் திறன் கொண்டிருந்தார்.
புகழ்பெற்ற கோட்டோவியர் மனோகர் தேவதாஸ் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கண் பார்வை இழந்து உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த மனோகர் தேவதாஸ் இன்று உயிரிழந்தார். இவருடைய இறப்புக்கு பலர் சமூகவலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.