மனோபாலா மறைவு - முதலமைச்சர் மற்றும் ஈபிஎஸ் இரங்கல்!
மனோபாலா மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மனோபாலா மறைவு
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான மனோ பாலா உடலநலக்குறைவால் காலமானார் அவருக்கு வயது 69. அவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன் வரிசையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனோபாலா மறைவு செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
ஸ்டாலின் இரங்கல்
தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்யமுடியாத இழப்பு. அவரது குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஈபிஎஸ் இரங்கல்
தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி, "தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளரும், திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், பிரபல நகைச்சுவை நடிகருமான மனோபாலா உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். சிறந்த முறையில் கழகப் பணிகளை ஆற்றியவர்.
தேர்தல் காலங்களில் இவருடைய பிரச்சாரப் பணிகள் மிகுந்த பாராட்டுதலுக்கு உரியவை. அன்னாரது இழப்பு கழகத்திற்கும், திரைப்படத் துறையினருக்கும் மிகுந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.