திட்டமிட்டே தமிழர்களின் கண்டுபிடிப்புகளை புறக்கணிக்கிறது அரசாங்கம் : மன்னர் மன்னன் சுவடுகள்

1 வாரம் முன்

காலத்தை கவனித்தல் அதாவது கடிகாரம் CLOCK TECHNIQUE மிகப்பெரிய ரகசியம் பழந்தமிழர்கள் காலத்தை கணிக்க சூரியனையும் சந்திரனையும் நம்பி இருந்தனர். இவை இரண்டும் தெரியா சமயத்தில் எதை வைத்து கணித்தனர் என்ற கேள்வி வரும்போது சங்க இலக்கியம் சொல்கிறது குறுநீர்க் கன்னல் என்ற ஒன்றை வைத்து காலத்தை கணித்தனர் என்று.

இந்த நீர் வைத்து கணிக்கும் முறை யவனர்கள் (எகிப்தியர்) கண்டது என அனைத்து உலகமும் நம்புகிறது.இன்று நாம் நேர்த்தை தூரத்தை கணிக்க பயன்படுத்தும் எண்முறையான அரபு எண்கள் ஆனது தமிழர்கள் கண்டுபிடித்தது எனக் கூRuகின்றார் வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன்.

மேலும், தமிழர்கள் அன்று வெள்உவா என்றால் பவுர்ணமி என்றும் கார்உவா என்றால் அமாவாசை என்றும் குறித்தனர். இவையெல்லாம் பழந்தமிழரின் வானியல் நுட்பத்தினை எடுத்துரைக்கிறது. மேலும் நிலம் பற்றியும், நீர் பற்றியும், அதன் இன்றியமையாமை பற்றியும் பழந்தமிழ் நூல்கள் செப்புகின்றன.

நிலம், நீர் இணைவே உணவு, உணவே உயிர்களின் அடிப்படை என்ற உயரிய தத்துவம் குடபுலவியனார் என்ற புலவர் புறநானூற்றில் கூறுகிறார். மேலும் செம்மண்ணிலே வீழ்ந்த தண்ணீர் எவ்வாறு சிவப்பான நிறத்தை பெறுகிறதோ, அதைப்போல காதலரும் நானும் இணைந்தோம் என்ற புகழ் பெற்ற சங்கப்பாடலில் தண்ணீர் நிறமற்றது அதை எந்த மண்ணைச் சார்கிறதோ அந்த நிறம் பெறும் என்ற அறிவியல் உண்மையை காதல் பாடல் வழி எடுத்துரைத்துள்ளனர்.

இவ்வாறு இருந்த தமிழ்ர்களின் கண்டுபிடிப்புகள் பல மறைந்து போனது எதனால் விளக்குகின்றார் மன்னர் மன்னன் சுவடுகள் நிகழ்ச்சியில்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.