கொரோனாவிலிருந்து மீண்டார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

covid19 india manmohansingh
By Irumporai Apr 29, 2021 10:02 AM GMT
Report

கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் 2-வது அலை தீவிரமாக இருந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறையும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுகிறது.

  இந்த நிலையில் , கடந்த சில நாட்களுக்கு முன்பு மன்மோகன் சிங்கிற்கு உடல்நலக்குறை ஏற்பட்டதையடுத்து, அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, உடனடியாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துமனையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு சிறப்பு மருத்துவ வல்லுநர்கள் குழு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் மன்மோகன் சிங் சிகிச்சை முடிந்து இன்று,அவரை மருத்துவர்கள் வழியினுப்பி வைத்தனா்.