சக்கர நாற்காலியில் மன்மோகன் சிங்..பாராட்டும் ஆம் ஆத்மீ, விமர்சிக்கும் பாஜக

Aam Aadmi Party Indian National Congress Manmohan Singh BJP
By Karthick Aug 08, 2023 07:12 AM GMT
Report

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று நாடாளுமண்டத்திற்கு சக்கர நாற்காலியில் வருகை தந்த நிலையில், அதனை வெட்கக்கேடானது என பாஜக சாடியுள்ளது.

சக்கர நாற்காலியில் மன்மோகன் சிங் 

டெல்லி அவசர சட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேறியதை அடுத்து, கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் இன்று நிச்சயமாக கலந்து கொள்ள வேண்டுமென காங்கிரஸ் கட்சி அறிவுறுத்தியிருந்தது. மேலும், இன்று பாஜகவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படவுளத்தாலும் அனைவரும் நிச்சயமாக கலந்துக்கொள்ள வேண்டுமென காங்கிரஸ் கோரிக்கை வைத்திருந்தது.

manmohan-singh-comes-parliament-in-wheel-chair

அதன் காரணமாக இன்று முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் தற்போதைய எம்.பி'யுமான மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் நாடாளுமன்றம் வருகை தந்தார். தனது 90 வயதிலும் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதை ஆம் ஆத்மி கட்சியின் எம்பி ராகவ் சதா ட்விட்டரில் நன்றி தெரிவித்தார்.

நேர்மையின் கலங்கரை விளக்கம்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று, ராஜ்யசபாவில், டாக்டர் மன்மோகன் சிங் நேர்மையின் கலங்கரை விளக்கமாக நின்றார். கருப்புச் சட்டத்துக்கு எதிராக வாக்களிக்க வந்தார். ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு மீதான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மிகுந்த உற்சாகம் அளிக்கிறது. அவர் அளித்த விலைமதிப்பற்ற ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்” என ராகவ் சதா பதிவிட்டுள்ளார்.

வெட்கக்கேடானது - பாஜக  

இந்நிலையில், இதனை விமர்சித்து பாஜக ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஹிந்தியில் வெளியிடப்பட்டுள்ள அந்த பதிவில், “காங்கிரஸின் இந்த பைத்தியக்காரத்தனத்தை நாடு நினைவில் கொள்ளும் என குறிப்பிட்டு, இவ்வளவு மோசமான உடல்நிலையிலும்கூட, காங்கிரஸ் ஒரு முன்னாள் பிரதமரை நாடாளுமன்றத்தில் சக்கர நாற்காலியில் அமர வைத்து வரவழைத்துள்ளது என்றும், இது மிகவும் வெட்கக்கேடானது என்று குறிப்பிட்டுள்ளது.