#MeToo புகாரில் சிக்கிய மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனர் - நடிகை அளித்த பரபரப்பு புகார்
மலையாள படமான மஞ்சும்மல் பாய்ஸ் படம் சினிமா ரசிகர்களிடம் பெரும் கவனத்தையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.
மஞ்சும்மல் பாய்ஸ்
"மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல" என்ற வசனமே தற்போது தென்னிந்தியாவை ஆட்டிப்படைகிறது. கமல்ஹாசனின் இந்த காதல் வசனத்தை நட்பிற்கான இலக்கணமாக மாற்றி, பெருமளவில் ரசிக்க வைத்துள்ளது மலையாள படமான மஞ்சும்மல் பாய்ஸ்.
கொடைக்கானல் "குணா கேவ்ஸ்" பகுதியில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இப்படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
#MeToo
குறிப்பாக நீண்ட காலம் கழித்து மலையாள படம் ஒன்று தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது இப்படமே. ரசிகர்கள் ஒரு புறம் படத்தை கொண்டாடி வரும் நிலையில், படத்தின் இயக்குனர் குறித்து நடிகை ஒருவர் #MeToo விவகாரத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் இயக்கத்தில் வெளியான ஜான் ஈ மேன் படத்தில் நடித்த நடிகை பிராப்தி எலிசபெத்.
இவர் தான் இயக்குனர் சிதம்பரம் மீது புகார்களை தெரிவித்துள்ளார். சிதம்பரம் தனக்கு எப்படி மெசேஜ் செய்தார் என்பதற்கெல்லாம் ஆதாரம் இருப்பதாக அவர் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் தற்போது அதிர்ச்சியடைந்துள்ளனர்.