இந்தியா தோற்றதுக்கு காரணம் ரஹானே-புஜாரா தான் : விளாசிய முன்னாள் இந்திய வீரர்

sanjaymanjrekar ajinkyarahane cheteshwarpujara
By Petchi Avudaiappan Jan 08, 2022 09:18 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியின் தோல்விக்கு புஜாரா மற்றும் ரஹானே ஜோடி தான் முதல் காரணம் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 2 போட்டிகள் முடிந்துள்ள இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றன. இதனிடையே 3 வது போட்டி ஜனவரி 11 ஆம் தேதி நடக்க உள்ளது.

இப்போட்டியின் 2வது இன்னிங்ஸில் ரஹானே, புஜாரா ஜோடி சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். இவர்களது ஆட்டம் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது என பலரும் கருத்து தெரிவிக்க தொடங்கிய நிலையில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர். 

 இதனிடையே இப்படி பொறுப்பில்லாமல் விக்கெட்டை கொடுத்து செல்வது இந்திய அணியின் தோல்விக்கு முதன்மை காரணமாக இருக்கிறது என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்திருக்கிறார். 2வது இன்னிங்சில் புஜாரா மற்றும் ரஹானே ஆடிய விதம், அரைசதம் அடித்தது இந்திய அணிக்கு பக்கபலமாக இருந்தது. அதேநேரம் இவர்கள் இருவரையும் இத்தனை போட்டிகள் தக்கவைத்ததற்கு, திரும்ப செய்திருக்கிறார்கள் என நினைக்கிறேன்.

ஆனால் அனுபவிக்க இவர்கள் அரைசதம் கடந்த பிறகு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். யாராவது ஒருவர் நிலைத்து நின்று விளையாடி, 80, 90 அல்லது சதம் அடித்திருக்க வேண்டும்.எதிரணியில் எப்படி டீன் எல்கர் விக்கெட் கொடுக்காமல் நிலைத்து விளையாடினார்?, அதுபோன்ற ஒரு ஆட்டத்தை இவர்கள் இருவரில் ஒருவர் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால், பின்னர் வந்த வீரர்களும் தாக்கு பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து சென்றனர். ஆகையால் இருவர் ஆட்டமிழந்தது இந்திய அணியின் தோல்விக்கு முதல் காரணமாக இருக்கிறது என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.