கல்யாணத்தில் அவமானப்படுத்திய உறவினர்கள் : ஹனிமூன் வேண்டாம் ..மஞ்சிமா எடுத்த அதிர்ச்சி முடிவு

Manjima Mohan
By Irumporai 1 மாதம் முன்
115 Shares

கடந்த சில நாட்களுக்கு முன்பு நவரச நாயகன் கார்த்திக் மகன் கெளதம் கார்த்திக்கும் நடிகை மஞ்சிமா மோகனுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இந்த நிலையில் இவர்கள் தற்போது வரை தேனிலவுக்கு செல்ல எந்த திட்டமும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

உடல் எடை அதிகரிப்பு

இதற்கு காரணம்ஆரம்பத்தில் ஒல்லியான உடல் வாகுடன் இருந்த அவர் சமீப காலமாக உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். இவரை பலரும் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வந்தாலும் தரமான பதிலடி கொடுத்திருந்தார் .

இந்நிலையில் திருமண மேடையிலேயே அவரை சிலர் குண்டாக இருப்பதை குறிப்பிட்டு கிண்டலடித்து இருக்கின்றனர். அதிலும் நெருங்கிய உறவுகளே அவரை இப்படி கேலி செய்ததை பார்த்து கௌதம் கார்த்திக் மிகவும் மனமுடைந்து போயிருக்கிறார்.

கல்யாணத்தில் அவமானப்படுத்திய உறவினர்கள் : ஹனிமூன் வேண்டாம் ..மஞ்சிமா எடுத்த அதிர்ச்சி முடிவு | Manjima Not To Honeymoon

மஞ்சிமா மோகன் வருத்தம் 

ஆரம்பத்தில் மீடியா எவ்வளவு உருவ கேலி செய்தாலும் கவலை இல்லை என்று சொன்ன மஞ்சிமா மோகன் இப்போது தன் கணவரின் வருத்தத்தை பார்த்து ஒரு அதிரடி முடிவு எடுத்திருக்கிறார். அதாவது அவர் தன் கணவருக்காக உடல் எடையை குறைக்க திட்டமிட்டு இருக்கிறார். அதன்படி 15 கிலோ வரை அவர் தன் எடையை குறைக்க இருக்கிறாராம்.

அதற்காக அவர் உடற்பயிற்சி, யோகா என்று பல விஷயங்களில் கவனம் செலுத்தி கொண்டிருக்கிறாராம். மேலும் தன்னை கேலி செய்த உறவுகளின் முகத்தில் கரியை பூசுவதற்காக அவர் வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்து வருகிறாராம்.

நினைத்தபடி உடல் எடையை குறைத்து விட்டு தான் அவர் ஹனிமூன் செல்ல திட்டமிட்டு இருக்கிறார். இதுதான் புதுமண தம்பதிகளின் ஹனிமூன் கேன்சல் ஆனதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.