டோக்கியோ பாராலிம்பிக்: தங்கம், வெள்ளி வென்று அசத்தும் இந்திய வீரர்கள்

Gold Paralympics Silver manishnarwal
By Irumporai Sep 04, 2021 05:59 AM GMT
Report

மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி டோக்கியோவில் நடைபெற்று வரும் நிலையில் இந்திய வீரர்கள் பதக்க வேட்டையை நடத்தி வருகின்றனர்.

நேற்று ஒரே நாளில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் பிரவீன்குமார் வெள்ளிப்பதக்கம், துப்பாக்கி சுடுதலில் அவனி லெகாரா வெண்கலப் பதக்கம் , வில்வித்தைப் போட்டியில் ஹர்வந்தர் சிங் வெண்கல பதக்கம் என ஒரே நாளில் மூன்று பதக்கங்களை வென்று இந்தியா சாதனைபுரிந்தது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சுடுதல் போட்டியின் 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர்கள் தங்கம், வெள்ளி பதக்கம் வென்றனர். இந்திய வீரர் மணீஷ் நர்வால் தங்கப் பதக்கமும், சிங்க்ராஜ் வெள்ளிப் பதக்கமும் வென்று அசத்தினர்.

10 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் சிங்க்ராஜ் ஏற்கனவே வெண்கலம் வென்ற நிலையில் தற்போது வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார். 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களுடன் பட்டியலில் 34-வது இடத்தில் இந்தியா உள்ளது.