நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடி பெண்கள் அல்ல பாரதத் தாய் தான் - சீமான் ஆவேசம்!
மணிப்பூரில் அரங்கேறிய பழங்குடியின பெண்கள் மீதான வன்முறை குறித்து சீமான் பேசியுள்ளார்.
மணிப்பூர் வன்முறை
மணிப்பூர், பெரும்பான்மையாக இருக்கக்கூடிய `மைதேயி' சமூக மக்கள், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென அரசை வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து `குக்கி' பழங்குடியின மக்கள் போராடி வருகின்றனர்.
இதில் ஒருவருக்கொருவர் மோதியதில், கலவரம் நாளுக்கு நாள் பெரும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்று குக்கி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி இழுத்துச் சென்ற இளைஞர்கள் சிலர், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதற்கு இந்தியா முழுவது கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையி இந்த விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சீமான் ஆவேசம்
அந்த டிவிட்டர் பதிவில் "பாஜாக அள்ளும் மானிலத்தில் பழங்குடி பெண்கள் ஆடையின்றி சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வு அதிர்ச்சியையும், கடும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பழங்குடி பெண்ணை இந்தியாவின் குடியரசு தலைவராக ஆக்கிவிட்டதாக பெருமை பேசிய பாஜக இரண்டு பழங்குடிபெண்களுக்கு நிகழ்த்தப்பட்டுள்ள மனச்சான்றற்ற அநீதிக்கு என்னபதில் கூறப்போகிறது கண்முன்னே சக மனிதர்களுக்கு நிகழ்த்தப்படும் சிறிதும் மனித தன்மையற்ற இதுபோன்ற கொடுமைகளை அனுமதித்துவிட்டு, நிலவிற்கு செயற்கைக்கோள் அனுப்பியதை அறிவியல் வளர்ச்சி என்று இந்த நாகரீக நாடு கொண்டாடுவது வெட்கக்கேடானது.
இதுதான் மோடி கண்டுபிடித்த புதிய இந்தியாவா? இந்தியாவில் மத, சாதி பாகுபாடுகள் இல்லையென்று கூசாமல் பொய் பேசிய பிரதமர் மோடி இப்போது வாய் திறப்பாரா மல்யுத்த வீராங்கனைகள் முதல் பழங்குடியின பெண்கள் வரை பாஜக ஆட்சியில் நடைபெறும் பாலியல் கொடுமைகள் உலக அரங்கில் இந்தியாவிற்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
பழங்குடியின மக்களுக்கு எதிராக தொடர்ந்து கட்டுக்கடங்காத கலவரம் நடைபெற்று வரும் மணிப்பூர் மாநிலத்தில் உடனடியாக குடியரசு தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும். பாரதம், பண்பாடு என்றெல்லாம் பிதற்றும் பாஜக ஆளும் மாநிலத்தில் நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடி பெண்கள் அல்ல பாரதத் தாய் தான் என்று சீமான் தெரிவித்துள்ளார்.