கைக்குழந்தையுடன் பள்ளிக்கு வந்த 10 வயது சிறுமி...சரியான நேரத்தில் உதவிய அமைச்சர்...

By Petchi Avudaiappan May 05, 2022 06:01 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

மணிப்பூரில் 10 வயது சிறுமியின் கல்விக்கு உதவுவதாக அமைச்சர் உறுதியளித்த நிலையில் அதனை தற்போது நிறைவேற்றியுள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பத்து வயது சிறுமி ஒருவர் பள்ளியில் பிறந்த கைக்குழந்தையை மடியில் வைத்துக்கொண்டே பாடம் படித்த புகைப்படம் கடந்த மாதம் சமூக வலைத்தளத்தில் வைராலானது.

டமேன்க்லாங் என்ற மாவட்டத்தை சேர்ந்த மெய்நிங்க்ஸின்லியு பமேய் என்ற 10 வயது சிறுமி டைலாங் என்ற பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் படித்துவருகிறார். இவரின் பெற்றோர் விவசாய வேலை செய்து வரும் நிலையில் பணிக்காரணமாக அவர்களின் கைக்குழந்தையை பகல் நேரத்தில் கவனித்துக்கொள்ள முடியவில்லை.

இதனால் அச்சிறுமி குழந்தையை தன்னுடன் வகுப்பறைக்கு அழைத்துவந்து மடியில் வைத்துக்கொண்டே பாடம் கவனித்துள்ளார்.  இந்த புகைப்படம் மணிப்பூர் அமைச்சர் தோங்காம் பிஸ்வஜித் சிங் கவனத்திற்கு சென்ற நிலையில் சிறுமியின் கற்கும் ஆர்வத்தை பாராட்டி அவரை இம்பாலில் உள்ள போர்டிங் பள்ளியில் அட்மிஷன் பெற்று தந்துள்ளார்.

மேலும் சிறுமியின் கல்விக்கான அனைத்து உதவியையும் அரசு மேற்கொள்ளும் என உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், 'எனது வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக இம்பாலில் உள்ள ஸ்லோப்லாந்து போர்டிங் பள்ளியில் சிறுமியின் சேர்கைக்கு ஏற்பாடு செய்துவிட்டேன். இவர் எதிர்காலத்தில் சிறந்த விளங்க என்னுடன் சேர்ந்த நீங்களும் வாழ்த்துங்கள்' என தெரிவித்துள்ளார்.