'ஒரே ஒருமுறை மணிப்பூருக்கு வாங்க மோடி' - குத்துச்சண்டை வீரர் கண்ணீர் மல்க கோரிக்கை!

Narendra Modi Viral Video India Manipur
By Jiyath Mar 11, 2024 07:33 AM GMT
Report

பிரதமர் மோடி, மணிப்பூருக்கு வந்து அமைதியை மீட்டெடுக்க வேண்டும் என்று குத்துச்சண்டை வீரர் சங்க்ரங் கோரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சங்க்ரங் கோரன் 

மணிப்பூரை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் சங்க்ரங் கோரன் என்பவரின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. டெல்லியில் மேட்ரிக்ஸ் ஃபைட் நைட் சாம்பியன்ஷிப் (MFN) என்ற குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.

இதில், சங்க்ரங் கோரன் என்ற வீரர் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு கண்ணீர் மல்க பேசினார். அதில் "மணிப்பூர் மாநிலத்தில் சுமார் ஒரு ஆண்டுக்கு மேலாக வன்முறை தொடர்ந்து வருகிறது. இந்த வன்முறையால் மணிப்பூர் மக்கள் பலர் உயிரிழந்து வரும் நிலையில், பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்களை எட்டி உதைத்த காவலர் - வைரலாகும் Video!

தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்களை எட்டி உதைத்த காவலர் - வைரலாகும் Video!

பிரதமருக்கு கோரிக்கை 

மணிப்பூரில் உணவு மற்றும் தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு நிலவுகிறது. குழந்தைகள் சரியாக படிக்க முடியவில்லை. அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே, தயவு செய்து ஒரே ஒரு முறை பிரதமர் நரேந்திர மோடி, மணிப்பூருக்கு வந்து அமைதியை மீட்டெடுக்க வேண்டும். இது எனது தாழ்மையான வேண்டுகோள்" என்று வலியுறுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.