ஐபிஎல் தொடரில் கோடிக்கணக்கில் ஏலம் போக உள்ள தமிழக வீரர் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்

manimaransiddhart Domestic cricket
By Petchi Avudaiappan Dec 09, 2021 04:51 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழக வீரர் மணிமாறன் சித்தார்த் விக்கெட் வேட்டை நடத்தியுள்ளார். 

இந்த தொடரின் லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடக அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கர்நாடக அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் களமிறங்கியது.

அந்த அணியில் கேப்டன் மணிஷ் பாண்டே 40 ரன்களிலும், ரோஹன் 37 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேற 122 ரன்களில் சுருண்டது.

இப்போட்டியில் 23 வயதான தமிழக வீரர் மணிமாறன் சித்தார்த் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இடது கை சுழற்பந்துவீச்சாளரான அவர் 4 போட்டிகளில் 10 விக்கெட் எடுத்து அசத்தியுள்ளார். 

இதனால் வரும் ஏலத்தில் கோடி ரூபாய்க்கு மேல் விலை போவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.பி.எல். தொடரில் இவரை ஏற்கனவே கொல்கத்தா, டெல்லி அணிகள் வாங்கியும் பயன்படுத்தவில்லை. இதனால் இவரை மீண்டும் கைப்பற்ற இவ்விரு அணிகளும் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.