மணிகண்டன் கட்டாயப்படுத்தியதால் நடிகைக்கு கருக்கலைப்பு செய்தேன் மருத்துவர் பகீர் வாக்குமூலம்!
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கட்டாயப்படுத்தியதால் நடிகைக்கு கருக்கலைப்பு செய்தேன் என மருத்துவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நடிகை அளித்த பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கோபாலபுரத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவரிடம் அடையாறு மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் மணிகண்டன் கட்டாயப்படுத்தியதால் நடிகைக்கு கருக்கலைப்பு செய்ததாக அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் நடிகையின் முகத்தில் காயத்துடன் இருந்தபோது தான் சிகிச்சை அளித்ததாகவும் அந்த மருத்துவர் கூறியுள்ளார். இதனிடையே விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள காவல்துறை, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நடிகையை தென்மாவட்டத்தில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு அழைத்து சென்று தங்கியிருந்ததை கண்டறிந்துள்ளனர்.
எனவே ஹோட்டலுக்கு சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். மணிகண்டனிடன் செல்போனை பறிமுதல் செய்து விசாரிக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளனர்.