நடிகை சாந்தினி அளித்த புகாரில் முன்ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனுத்தாக்கல்
ADMK
Shanthini
Manikandan
By mohanelango
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி சமீபத்தில் புகார் அளித்திருந்தார். தன்னை திருமனம் செய்து கொள்வதாகக் கூறி ஐந்து ஆண்டுகளாக இருந்துவிட்டு இறுதியாக தன்னை ஏமாற்றிவிட்டதாக தெரிவித்திருந்தார்.
இந்த புகாரைத் தொடர்ந்து மணிகண்டன் மீது காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
மணிகண்டன் சென்னையில் தலைமறைவாக இருப்பதாகவும் அவரைக் காவல்துறை தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் மணிகண்டன் முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்