மணிகண்டன் மரணம் தொடர்பில் போலீசார் புது விளக்கம்
ராமநாதபுரத்தில் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்று திரும்பிய கல்லூரி மாணவர் மணிகண்டன் விவாகரத்தில் ஏடிஜிபி தாமரைக்கண்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் காவல் நிலையத்தில் போலீசார் மேலதூவல் கிராமம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த நீர்க்கோழியேந்தால் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் தனது நண்பரான சஞ்சயுடன் முதுகுளத்தூர் வந்துள்ளார். போலீசார் இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இதில் கல்லூரி மாணவன் மணிகண்டன் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த போலீஸார் அவரை பின்தொடர்ந்து சென்று விரட்டிபிடித்து மணிகண்டனை மட்டும் மேலதூவல் கிராமத்திலிருந்து அடித்தது காவல் நிலையதிற்கு விசாரணைக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாலை 6.30 மணிக்கு மணிகண்டனின் பெற்றோருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு கல்லூரி மாணவன் மணிகண்டனை வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு தெரிவித்துள்ளனர். நடக்க கூட முடியாமல் மணிகண்டனை பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
வீட்டில் 3 முறை மணிகண்டன் ரத்த வாந்தி எடுத்துள்ளார். இரவில் தூங்கிய நிலையில் காலை இறந்த நிலையில் படுக்கையில் கிடைந்துள்ளார், போலீஸார் மணிகண்டனை அடித்துக் கொலை செய்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டினர்.
இந்த விவகாரம் பரபரப்பை கிளப்பிய நிலையில், காவல்துறை தாக்கி மணிகண்டன் இறக்கவில்லை என்றும், விஷமருந்தியே உயிரிழந்தது பிரேத பரிசோதனையில் உறுதியானது எனவும் சட்டம் ஒழுங்கி ஏடிஜிபி தாமரைக்கண்ணன் விளக்கம் அளித்துள்ளார்.