மறு உடற்கூராய்வுக்குப் பின் மணிகண்டன் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

manikandan mortumcase
By Irumporai Dec 09, 2021 10:26 AM GMT
Report

ராமநாதபுரம் மாவட்டத்தில் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு, மர்மமான முறையில் உயிரிழந்த கல்லூரி மாணவர் மணிகண்டனின் உடல், மறு உடற்கூராய்விற்கு பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வாகன சோதனையின்போது இருசக்கர வாகனத்தில் நிற்காமல் சென்ற கல்லூரி மாணவர் மணிகண்டனை, கீழ்த்தூவல் காவல் துறையினர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் வீடு திரும்பிய மணிகண்டன் இரவில் தூங்கிய நிலையில் காலையில் இறந்து கிடந்தார். காவல் துறையினர் தாக்கியதாலே, மணிகண்டன் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.  

மணிகண்டன் மீது எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை என, சிசிடிவி ஆதரங்களை காட்டி காவல் துறையினர் விளக்கம் அளித்தனர். இருப்பினும் அதனை ஏற்க மறுத்த உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறு உடற்கூராய்வுக்குப் பின் மணிகண்டன் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு | Manikandan Body Re Post Mortum Case

இதனையடுத்து மணிகண்டனின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இதனையடுத்து ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மணிகண்டனின் உடல் மறு உடற்கூராய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வின் போது மணிகண்டன் தரப்பில் ஒரு மருத்துவரும் பங்குபெற்றார். நீதிமன்ற உத்தரவுப்படி உடற்கூராய்வு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.

பின்னர் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தபோது, அவர்கள் ஆய்வு முடிவு வரும் வரை உடலை வாங்க மாட்டோம் என மறுப்பு தெரிவித்தனர்.

இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறை உயரதிகாரிகள், மணிகண்டனின் உறவினர்களை சமாதானப்படுத்தி உடலை ஒப்படைத்தனர்.