டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி
Table tennis
Tokyo Olympics
Manika Batra
Sharath Kamal
By Petchi Avudaiappan
டோக்கியோ ஒலிம்பிக்கின் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரத் கமல் - மணிகா பத்ரா ஜோடி தோல்வியடைந்தது.
இன்று நடைபெற்ற போட்டியில் உலக தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள சீன தைபே ஜோடியான லின் யன் ஜூ-செங்கு ஜிங்குவை சரத்கமல் - மணிகா பத்ரா ஜோடி எதிர்கொண்டது. இதில், 8-11, 6-11, 5-11, 4-11 என்ற நேர் செட்டில் சரத்கமல் - மணிகா பத்ரா ஜோடி தோல்வியடைந்தது.
ஒலிம்பிக் போட்டியில் இந்தியா கண்டிப்பாக பதக்கம் வெல்லும் கணிக்கப்பட்டதில் டேபிள் டென்னிஸ் போட்டியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.