பிரபல பாடகர் மாணிக்க விநாயகம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

Death CM MK Stalin Condolences Manika Vinayagam
By Thahir Dec 26, 2021 11:39 PM GMT
Report

பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் நேற்று மாலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73.

2001-ம் ஆண்டு வெளியான 'தில்' திரைப்படத்தில் 'கண்ணுக்குள்ள ஒருத்தி' என்ற பாடல் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர் பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களைப் பாடியுள்ளார்.

இதுதவிர பக்திப் பாடல்கள், நாட்டுபுறப் பாடல்கள் என 15,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் பழம்பெரும் பரத நாட்டிய ஆசிரியர் வழுவூர் ராமையாவின் மகன் ஆவார்.

இவரது மறைவுக்கு நடிகர், நடிகைகள் உள்பட திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது.

இந்நிலையில், மாணிக்க விநாயகம் மறைவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

பிரபல திரைப்பட பாடகர் வழுவூர் மாணிக்க விநாயகம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். தலைவர் கலைஞர் மீதும், என் மீதும் அளவற்ற அன்பை பொழிந்து,

பெயரை போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.