3வது சுற்றில் தோற்ற இந்திய வீராங்கனை... ரசிகர்கள் அதிர்ச்சி
டோக்கியோ ஒலிம்பிக்கின் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா அதிர்ச்சி தோல்வி அடைந்து ஏமாற்றமளித்துள்ளார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் மனிகா பத்ரா இங்கிலாந்தின் ஹோ டின்னையும்,2வது சுற்றில் உக்ரைன் வீராங்கனை மார்க்ரெட்டையும் வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார். இன்று நடந்த 3வது சுற்றில் ஆஸ்திரியா வீராங்கனை சோனியா பால்கானோவாவை எதிர்கொண்டார்.
முதல் சுற்றை 8 -11 என்ற கணக்கிலும், 2வது செட்டை 2 - 11 என்ற கணக்கிலும், 3வது செட்டை 5 - 11 என்ற கணக்கிலும், 4வது சுற்றிலும் 7 -11 என்ற கணக்கிலும் மணிகா பத்ரா இழந்தார். வெறும் 27 நிமிடங்களில் முடிவுற்ற இப்போட்டியில் மணிகா பத்ராவால் ஒரு செட்டை கூட கைப்பற்ற முடியவில்லை.
இதனால் அவரின் ஒலிம்பிக் பதக்க கனவு முடிவுக்கு வந்துள்ளது.இதேபோல் மற்றொரு போட்டியில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி போர்ச்சுகல் வீராங்கனை ப்யு யூவை எதிர்கொண்டு 11-3, 11-3,11-5, 11-5 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்தார்.