ஒலிம்பிக்கில் அசத்தும் இந்தியா... டேபிள் டென்னிஸில் மணிகா வெற்றி
Table tennis
Manika Batra
Tokyo Olympics 2020
By Petchi Avudaiappan
டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் டேபிள் டென்னிஸ் போட்டியின் 2வது சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா வெற்றி பெற்றார்.
இப்போட்டியில் அவர் உக்ரைன் வீராங்கனை மார்க்ரெட்டைவை எதிர்கொண்டார். இதில் முதல் 2 செட்களை 4-11, 4-11 என்ற கணக்கில் இழந்து மணிகா பத்ரா பின்னடைவைச் சந்தித்தார்.
சுதாரித்த அவர் 11-7, 12-10 என்ற கணக்கில் அடுத்த 2 செட்களை வென்று மிரட்டினார். ஆனால் 5வது சுற்றை மார்க்ரெட் 11-8 என்ற கணக்கில் வெல்ல, 6வது மற்றும் 7வது செட்களை மணிகா 11-5, 11-7 என்ற கணக்கில் வென்று போட்டியில் வெற்றி பெற்றார்.