சமத்துவ பொங்கலா? மோடி பொங்கலா?" - கொந்தளித்த மாணிக்கம் தாகூர் எம்பி

modi tamilnadu manickamtagore
By Irumporai Jan 02, 2022 11:07 AM GMT
Report

தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை திறந்துவைத்து விருதுநகரில் பேச உள்ள பிரதமர் மோடி சிவகாசி பட்டாசு பிரச்சினை குறித்தும் பேச வேண்டும் என மாணிக்கம்தாகூர் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

விருதுநகரில் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "ராஜீவ் காந்திக்குப் பிறகு 2வது பிரதமராக மோடி விருதுநகர் வருகிறார். அவரை வரவேற்கிறோம்.

மாவட்டத்தில் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் உள்ளன. அவைகளுக்கு தீர்வு காணும் வகையில் பிரதமர் வருகை இருக்க வேண்டும். சிவகாசி பட்டாசு பிரச்சினை குறித்தும் பிரதமர் மோடி பேச நேரம் ஒதுக்க வேண்டும். காரைக்குடியில் நீரி அமைப்பின் கிளையைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமத்துவ பொங்கல் விழா கொண்டாடும் தமிழகத்தில் பாஜகவினர் மார்கழியில் மோடி பொங்கல் கொண்டாடுகிறார்கள். பாஜக இதை நிறுத்த வேண்டும். இதேபோன்று, வட மாநிலங்களில் மோடி நவராத்திரி விழா, மோடி விஜயதசமி விழா கொண்டாட முடியுமா? என கேள்வி எழுப்பினார்.