‘‘பணம் என்றால் ஓ.எஸ்.மணியன் பணம் இல்லையென்றால் நோ.எஸ்.மணியன்’’ - ஸ்டாலின் கிண்டல்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார் திமுக கூட்டணியில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் ஸ்டாலின் இந்த பிரச்சாரத்தில் பேசிய அவர், நாகை மாவட்டத்தில் இருக்கும் அமைச்சர் ஓ.எஸ்.மணியனை பற்றிசுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ,பணம் என்றால் ஓ.எஸ்.மணியன், பணம் இல்லையென்றால் நோ.எஸ்.மணியன். கஜா புயலின்போது மக்களால் விரட்டி அடிக்கப்பட்டவர் ஓ.எஸ்.மணியன் என கூறினார்.

மேலும்,கஜா புயலின் போது நிவாரணம் கேட்ட 150-க்கும் மேற்பட்ட நபர்கள் மீதுஅமைச்சர் ஓ.எஸ்.மணியன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, மீது கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டது தற்போது அந்த நபர்கள் வேலைக்கு போக முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அமைச்சரால் போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என ஸ்டாலின் கூறினார்.