அடப் பாவமே... ‘என்னை மணிரத்னம் கடித்து குதறிவிட்டார்...’ - ரகசியம் சொன்ன தயாரிப்பாளர் - ஷாக்கான ரசிகர்கள்...!
‘என்னை மணிரத்னம் கடித்து குதறிவிட்டார்...’ என்று பிரபல தயாரிப்பாளர் சொன்ன செய்தியைக் கேட்டு ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.
‘பொன்னியின் செல்வன்’ படம்
தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனராக விளங்கும் மணிரத்னம், தனது கனவு படமான பொன்னியின் செல்வனை வெற்றிகரமாக இயக்கி முடித்தார். இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு, சரத்குமார், ஜெயராம், பாலாஜி சக்திவேல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்போடு திரையரங்கில் வெளியானது. 'பொன்னியின் செல்வன்' படம் உலகம் முழுவதும் ரூ. 400 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனைப்படைத்தது.

மணிரத்னம் என்னை கடித்து குதறிவிட்டார்....
“கூலி”, “மாண்புமிகு மாணவன்”, “வேட்டையாடு விளையாடு” போன்ற பல திரைப்படங்களை தயாரித்தவர் மாணிக்கம் நாராயணன். இவர், பல தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்துள்ளார்.
சமீபத்தில் இவர் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது அவர் பேசுகையில்,
மணிரத்னம் படத்தை வெளியிட்டதால் எனக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டது. கடந்த 2002ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில், மாதவன், சிம்ரன், கீர்த்தனா ஆகியோரின் நடிப்பில் வெளியான படம் “கன்னத்தில் முத்தமிட்டால்”. இப்படம் வெளியானபோது, படுதோல்வியடைந்தது. இருந்தாலும், இப்போதும் இப்படம் பேசப்பட்டு வருகிறது. நானும், மணிரத்னத்தின் மனைவி சுஹாசினியும் நல்ல நண்பர்கள்.
இதனால், “கன்னத்தில் முத்தமிட்டால்” திரைப்படத்தை வட ஆற்காடு, தென் ஆற்காடு, சிட்டி, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் வாங்கி வெளியிட்டேன். இப்படத்தின், பிரிவ்யூ ஷோவை பார்த்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இப்படம் நிச்சயம் ஓடாது என்று நினைத்தேன். அதேபோல் இப்படம் படுதோல்வியடைந்தது.
1 கோடியே 58 லட்சம் கொடுத்து “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தை வாங்கினேன். திருவண்ணாமலையில் உள்ள தியேட்டரில் இப்படத்தை பார்த்தவர்கள் திரையரங்கின் சீட்டுகளையே கிழித்துவிட்டார்கள். அதே போல் 2 நாட்களில் பல பகுதிகளில் இருந்த திரையரங்குகளிலிருந்து படப்பெட்டி அனைத்தும் என்னிடம் திருப்பி வந்துவிட்டது.
திரையரங்கு உரிமையாளர்களுக்கு பணம் Refund கொடுக்க முடியாமல் நான் மலேசியாவிற்கு ஓடிப்போய்விட்டேன். பிறகு, அங்கு தேவையான பணத்தை தயார் செய்து சென்னைக்கு திரும்பினேன். மணிரத்னம் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற ஒரு படத்தை எடுத்து என்னை கடித்து குதறிவிட்டார் என்றார்.
அமெரிக்க தூதுக்குழுவை தடுத்த ட்ரம்ப்! அர்த்தமற்ற விடயங்களுக்காக 18 மணி நேர விமானப் பயணங்கள் வேண்டாம் IBC Tamil
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan
இரண்டாவது சுற்று அமைதிப்பேச்சு முயற்சி தோல்வி : பாகிஸ்தானுக்கான அமெரிக்க குழுவின் பயணம் இரத்து IBC Tamil